1984-ம் வருடம் அம்மாவின் பிறந்தநாள் விழாவின் போது,
மேலும் படிக்க
நேர்மறை மாற்றங்களுக்கான ஆன்மீக இதழ்.
9 இந்திய மொழிகள், 8 அன்னிய மொழிகள்.
விரும்பும் மாத்ருவாணி இதழை தேர்ந்தெடு.
விரும்பும் மொழியில் படிக்கலாம்
மாத்ருவாணி - அம்மாவின் குரல் - 1984-ம் வருடம் அம்மாவின் பிறந்தநாள் விழாவின் போது,மேலும் படிக்க
மாத்ருவாணி மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் அச்சிடப்படுகிறது மேலும் படிக்க
அம்மா என்று உலகம் முழுவதும் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி அவர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக குருவாக திகழ்கிறார்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அரவணைத்து ஆறுதல் கூறும் அம்மாவின் செயல் 'எல்லோரிடத்தும் அன்பு காட்டி சேவை செய்ய வேண்டும்' என்ற அவருடைய முக்கிய தத்துவத்தை பிரதிபலிக்கிறது.
என் வாழ்க்கையே என் செய்தி என்று அம்மா சொல்வது போல, அம்மா தனிப்பட்ட முறையிலும், தனது எளிய அறிவுரைகள் மூலமும் காலங்கடந்த உலகளாவிய ஆன்மீக ஞானத்தை உலகம் முழுதும் உள்ள எல்லா துறைகளையும் சார்ந்த மக்களுக்கும் அளிக்கிறார்.
அம்மாவின் துறவும் தொண்டும் மூலமாக பல்வேறு சேவை திட்டங்களை உலகிற்கு அம்மா அளித்துள்ளார். அவை பேரிடர் நிவாரணம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி, பெண்கள் முன்னேற்றம், பல்வேறு சேவை செயல்கள், தொழிற்பயிற்சிகள், எளியோருக்கு வீடு வழங்குதல்,அனாதை இல்லங்கள்,ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை, சுற்றுச்சூழல் நலத்திட்டங்கள்.
மாதா அமிர்தானந்தமயி மடம் 5 வளாகங்களில் செயல்படும் அமிர்தா பல்கலைகழகத்தை நடத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல சிறந்த பல்கலைகழகங்களுடன் இணைந்து அமிர்தா பல்கலைகழகம் எல்லாருக்கும் பண்பு நலன் பயிற்சியோடு இணைந்த கல்வியும், சமுதாய நல ஆராய்ச்சிகளும் செய்துவருகிறது. நாடு முழுவதும் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளிகளில் பண்டைய பாரத கலாச்சாரத்தை பற்றிய கல்வி அளிக்கப்படுகிறது.
.