மாத்ருவாணியை பற்றி

மாத்ருவாணி — அம்மாவின் குரல் — மாதா அமிர்தானந்தமயி மடத்தின் முத்திரை பதிப்பு.
 
முதன்முதலாக 1984-ம் வருடம் அம்மாவின் பிறந்தநாள் விழாவின் போது, அம்மாவின் அறிவுரைகளை உலகம் முழுவதுமுள்ள அம்மாவின் குழந்தைகள் படித்து மகிழ தொடங்கப்பட்டது. பல லட்சம் மக்களால் இன்று அது படிக்கப்படுகிறது.
 
உலகம் முழுவதும் அம்மா மதிப்புடனும் அன்புடனும் போற்றப்படுவதை பிரதிபலிக்கும் வகையில் பல கண்டங்களிலும் வாழும் மக்களை சென்றடையும் வகையில் பத்திரிகையின் சந்தா உயர்ந்துள்ளது.
 
பத்திரிகையின் வளர்ச்சிக்கு அம்மாவே முழுமுதற்காரணமாவார்.
தன்னலமற்ற அன்பு மற்றும் கருணையின் வடிவமாவார்.எளிமையான, உயர்ந்த ஆன்மீக, ஆழமான, உலகத்திற்கு பொதுவான, காலத்தை கடந்து வாழ்பவை அம்மாவின் அறிவுரைகள்.
 
அம்மாவின் அறிவுரைகளையும், பக்தர்களின் உன்னத அனுபவங்களையும், நினைவலைகளையும், கட்டுரைகளையும் மாத்ருவாணி பத்திரிகை சுமந்து வருகிறது. அம்மாவின் இந்திய மற்றும் வெளிநாட்டு பயண விவரங்களையும், மடத்தின் சேவை செயல்களை பற்றிய செய்திகளும் பத்திரிகையில் இடம்பெறும்.
 
மாத்ருவாணி 15 மொழிகளில் வெளிவருகிறது. அதில் 8 இந்திய மொழிகள், 7 அன்னிய மொழிகள்(மலையாளம், தமிழ், கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி,மராத்தி, குஜராத்தி,பெங்காலி),ஆங்கிலம்,ப்ரஞ்ச்,ஜெர்மன்,ஸ்பானிஷ்,இத்தாலி,பின்னிஷ், ஜப்பானிஸ்
 
30 வருடங்களுக்கும் மேலான இறை இயக்கத்தின் பிரசுரமான மாத்ருவாணியின் மதிப்பு அளவிடற்கரியது. மாத்ருவாணியின் கடந்த இதழ்கள் இங்கே காணலாம். இறைவனின் குரல் உங்களை உயர்த்தட்டும்.